உலகின் முக்கிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், நிர்வகிப்பதிலும் இந்தியர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்து வருகிறார்கள்.
அந்த வகையில், யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நீல் மோகன் குறித்துப் பார்ப்போம்,
இந்தியாவின் லக்னோவைப் பூர்வீகமாகக் கொண்ட நீல் மோகன், கலிஃபோர்னியா Stanford பல்கலைக்கழகத்தில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் பட்டமும், எம்பிஏ முதுகலைப் பட்டப் படிப்பையும் முடித்தார்.
1996-ஆம் ஆண்டு Accenture நிறுவனத்தில் பணியாற்றிய நீல் மோகன், பின்னர், 1997-ஆம் ஆண்டு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமான NetGravity என்ற நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவ்வாறு, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய இவர், DoubleClick என்ற நிறுவனத்தில் சேர்ந்து தன்னுடைய உழைப்பால் படிப்படியாக உயர்ந்தார்.
இதற்கிடையே, அந்த நிறுவனத்தைக் கூகுள் நிறுவனம் வாங்கிக் கொண்டது. அதன் பிறகு, 2008-ஆம் ஆண்டு முதல் இன்று வரை கூகுள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் செயல்பட்டு வருகிறார் நீல் மோகன். யூடியூப் நிறுவனத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள பல்வேறு யோசனைகள் இவருடையதுதான்.
குறிப்பாக, 2015-க்கு பிறகு வீடியோ தளங்களின் பெருக்கத்தால் யூடியூப் சந்தித்த சவாலான சூழலைத் தனது சிறந்த யோசனை மற்றும் திட்டமிடலின் மூலம் வெற்றிப்பாதைக்குக் கொண்டு சென்றார். தொடர்ந்து, அந்நிறுவனத்தின் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக இருக்கிறார்.
யூடியூப் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய நீல் மோகன் 2023-ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.