சி-295 போர் விமானம்: இந்தியாவிடம் ஒப்படைப்பு!
Mar 15, 2026, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி-295 போர் விமானம்: இந்தியாவிடம் ஒப்படைப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 14, 2023, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிற்காக ஏர்பஸ் நிறுவனம் தயாரித்த முதலாவது சி-295 ரக விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏர்பஸ் நிறுவனம் இந்திய விமானப்படைக்காக 56 சி-295 ரக விமானங்களைத் தயாரித்து அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதையடுத்து, ஸ்பெயின் நாட்டின் செவில் நகரிலுள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் விமானத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சி-295 எம்டபிள்யூ ரக விமானமானது 5 முதல் 10 டன் எடையைச் சுமந்து செல்லும் திறன் படைத்தது. பாராசூட் குழுவினரைக் குறிப்பிட்ட இடத்தில் தரை இறக்குவதற்கும், சரக்குகளைச் சுமந்து சென்று தரை இறக்குவதற்கும் இந்தவகையிலான விமானங்கள் பயன்படுகிறது.

இந்த விமானத்தைக் குறுகிய தூர ஓடுபாதையில் சுலபமாக தரையிறக்கவும், மேலெழுப்பவும் முடியும். இந்த விமானம் 11 மணி நேரம் தொடர்ச்சியாகப் பறக்கும் திறன் கொண்டது.

இந்நிலையில், நேற்று ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏர் பஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சவுத்ரி முதல் விமானத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தின்படி 16 சி295 விமானங்கள் ஸ்பெயினிலும், மீதமுள்ள 40 விமானங்கள் குஜராத்தில் உள்ள வதோதரா ஆலையிலும் உற்பத்தி செய்யப்படும்.

வதோதராவில் உள்ள ஆலையானது, ஏர் பஸ் நிறுவனமும், டாடா நிறுவனமும் ஒருங்கிணைந்து உருவாக்கியதாகும்.

இதுபோன்ற விமானங்கள் தற்போது, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், உக்ரைன், பிரேசில், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளன. தற்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: indian defencec 295 airbustata
ShareTweetSendShare
Previous Post

இலவச சிலிண்டர்! உஜ்வாலா திட்டத்திற்கு ரூ.1,650 கோடி நிதி ஒதுக்கீடு.!

Next Post

ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies