செப்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் 21 வயதான கைவல்யா வோஹ்ரா இந்திய இளம் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தார்.
கர்நாடக மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி கைவல்யா வோஹ்ரா பிறந்தார். பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அப்பொழுது கொரோனா தொற்று அதிகமாக இருந்ததால், கைவல்யாவும், அவரது நண்பர் ஆதித் பாலிச்சாவும் பல்கலைக்கழகத்தை விட்டு விலகினர்.
பின்னர், கைவல்யா வோஹ்ரா மற்றும் ஆதித் ஆகியோர் இணைந்து கிரன்கார்ட் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தைத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டோ என்ற நிறுவனத்தைக் மும்பையில் தொடங்கினர்.
தற்பொழுது, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் செப்டோ உள்ளது. இந்த நிறுவனம் டெல்லி, சென்னை, குர்கான், பெங்களூரு, மும்பை உள்ளிட்ட 10 பெரிய நகரங்களில் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக கைவல்யா இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த 2022-ஆம் ஆண்டு ஒய்.சி. கன்டினியூட்டி பண்ட் என்ற நிறுவனம் 200 மில்லியன் டாலரை செப்டோ நிறுவனத்தில் முதலீடு செய்தது.
இதையடுத்து, செப்டோ நிறுவனத்தின் மதிப்பு வரலாறு காணாத அளவு உயர்ந்தது.
இந்நிலையில், கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 1,036-வது கைவல்யா வோஹ்ரா பிடித்தார். அவருடைய நிகர மதிப்பு ரூபாய் 1,000 கோடியாக இருந்தது. 21 வயதான இவர் இந்தியாவின் இளம் பணக்காரர் என்ற பெருமையே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.