ஏராளமான யூகங்களுக்கும், கோரிக்கைகளுக்கும் பிறகு அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான 17 பேர் கொண்ட கால்பந்து அணியை வெளியிட்டுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கால்பந்துப் போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு 17 பேர் கொண்ட அணியை வெளியிட்டுள்ளது.
இந்த அணியில் குர்மீத் சிங், தீரஜ் சிங் மொய்ராங்தெம், சுமித் ரதி, நரேந்தர் கஹ்லோட், தீபக் டாங்ரி, அமர்ஜித் சிங் கியாம், சாமுவேல் ஜேம்ஸ், ராகுல் கேபி, அப்துல் ரபீஹ் அஞ்சுகந்தன், ஆயுஷ் தேவ் சேத்ரி, பிரைஸ் மிராண்டா, அஸ்பர் நூரானி, ரஹீம் அலி, வின்சி பாரெட்டோ, சுனில் சேத்ரி, ரோஹித் தனு, குர்கீரத் சிங், அனிகேத் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அணியில் பெரும்பாலோர் அனுபவம் இல்லாத இளைய வீரர்களாக இருப்பதால் இரசிகர்கள் தேர்வுக்குழுவின் மீது கோபம் கொண்டுள்ளனர். ஆனால் ISL நடைபெற இருப்பதனால் மூத்த வீரர்களால் இதில் பங்குபெற முடியவில்லை. கால்பந்தில் தலைசிறந்த வீரர்களை எல்லாம் ISL போட்டிக்காக ஏலம் எடுத்துள்ளதாலும் இரு போட்டிகளும் ஒரே சமயத்தி நடைபெறுவதாலும் அவர்களால் இந்தப் போட்டியில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.
மேலும் இந்தப் போட்டியில் கல்பத்தின் தலைசிறந்த வீரரான சுனில் சேத்ரி தலைமையில் தான் இந்தியா அணி களமிறங்கும் என்பது இரசிகர்களிடையே சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.