ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெலுக்கும் அவரது மனைவியான தமிழ் பெண் வினி ராமனுக்கும் குழந்தை பிறந்துள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மற்றும் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல் 2022 ஆம் ஆண்டு தமிழ் பெண்ணான வினி ராமனை திருமண செய்துகொண்டார்.
கடந்த மே மாதம் தான் தந்தையாக போவதை உணர்த்தும் வீதமாக ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் குழந்தையின் துணியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதை தொடர்ந்து இன்று அக்குழந்தையின் கையை அவரும் அவரின் மனைவியும் பிடித்தவாறு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இவருக்கு இரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.