தலைநகர் டெல்லியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, தென்மேற்கு டெல்லி வசந்தவிகார், முகிர்தா, ஆர்.கே. புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளின் இருபுறங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கி நின்றது.
டெல்லி-நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் மழையின் காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில், டெல்லியில் மேலும், 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.