மணிப்பூர் கலவரம்: வெளியானது முழு தகவல்!
Oct 26, 2025, 09:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மணிப்பூர் கலவரம்: வெளியானது முழு தகவல்!

காவல்துறை ஐ.ஜி.க்கள் 3 பேர் தனித்தனியாக அறிக்கை வெளியீடு!

Web Desk by Web Desk
Sep 16, 2023, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் கலவரம் தொடர்பான முழுத் தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. காவல்துறையைச் சேர்ந்த 3 ஐ.ஜி.க்கள் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ம் தேதி நடந்த பேரணியின்போது, கூகி பழங்குடியினருக்கும், மெயிட்டி சமூகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக வெடித்த நிலையில், ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமான தேவாலயங்கள், கோவில்கள் எரிக்கப்பட்டன. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் ஆடையின்றி நிர்வாணமாக, ஊர்வலமாக இழுத்து வரப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்னமும் கலவரம் முழுமையாக ஓய்ந்த பாடில்லை.

இந்த நிலையில், கலவரத்தால் மணிப்பூரில் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்த தகவல்களை காவல்துறையைச் சேர்ந்த 3 ஐ.ஜி.க்கள் வெளியிட்டுள்ளனர். ஐ.ஜி. (செயல்பாடுகள்) ஐ.கே.முய்வா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மணிப்பூரில் இந்த சவாலான நேரத்தில் காவல்துறை, மத்தியப் படைகள் மற்றும் சிவில் நிர்வாகம் ஆகியவை இயல்பு நிலை திரும்ப 24 மணி நேரமும் முயற்சி செய்து வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு உறுதியளிக்க முடியும்.

வன்முறையின்போது, ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுவரை 1,359 துப்பாக்கிகள் மற்றும் 15,050 வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 5,172 தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 254 கிறிஸ்தவ ஆலயங்கள், 132 கோவில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பிஷ்னுபுர் மாவட்டம் பௌகாக்சாயோ இகாயில் இருந்து சுரசந்த்புர் மாவட்டம் கங்வாய் வரையிலான பாதுகாப்பு தடுப்புகள் நீக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, ஐ.ஜி. (நிர்வாகம்) கே.ஜெயந்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கலவரத்தில் 175 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 79 உடல்கள் உறவினர்களால் உரிமை கோரப்பட்டுள்ளது. 96 பேர் உடல்கள் உரிமை கோரப்படவில்லை. இம்பாலில் உள்ள மருத்துவமனைகளில் 56 உடல்களும், சுரசந்த்புர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 42 பேர் உடல்களும் வைக்கப்பட்டுள்ளது. இக்கலவரம் தொடர்பாக 9,332 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.

மண்டலம் 3 ஐ.ஜி. நிஷித் உஜ்வால் அறிக்கையில், “தேசிய நெடுஞ்சாலை 32, தேசிய நெடுஞ்சாலை 2 ஆகியவற்றில் தற்போது வழக்கமான முறையில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: manipurviolenceI.G. Report
ShareTweetSendShare
Previous Post

சனாதனத்துக்கு எதிராக தி.மு.க. பேசுவது புதிதல்ல!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன்: தீர்ப்பு 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Related News

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies