தில்லி சுங்கத்துறை ரூ.396.5 கோடி மதிப்புள்ள 147 கிலோ சட்டவிரோத போதைப் பொருட்களை அழிக்கப்பட்டது.
போதைப் பொருட்களுக்கு (என்.டி.பி.எஸ்) எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, தில்லி சுங்கத்துறை ரூ .396.5 கோடி மதிப்புள்ள 147 கிலோ சட்டவிரோத போதைப் பொருட்களை அழித்தது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் (சி.பி.சி.பி) அங்கீகரிக்கப்பட்ட கழிவு மேலாண்மை மையத்தில் இந்தப் போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
இந்த மையத்தில், 56.346 கிலோ ஹெராயின், 2.150 கிலோ எம்.டி.எம்.ஏ ஹைட்ரோகுளோரைடு, 0.2193 கிலோ மரிஜுவானா மற்றும் 1.6475 கிலோ கஞ்சா உள்ளிட்ட 60.3628 கிலோ சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் 87 கிலோ எடையுள்ள 10,894 என்.டி.பி.எஸ்-டி.டி.ஜி.இ.சி காப்ஸ்யூல்கள் ஆகியவை எரித்து அழிக்கப்பட்டன.
அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (எம் & டிஎம்) விதிகள்-2016-ன் கீழ் இந்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட போதைப்பொருட்கள், புதுதில்லியில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் கைப்பற்றப்பட்டவையாகும். இந்த அழிப்பு நடைமுறை முழுவதும் உயர்மட்டக் குழுவால் கண்காணிக்கப்பட்டது.