மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மேலும், சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் குறிப்பாக, கோடம்பாக்கம், கோயம்பேடு, கிண்டி, மீனம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், ஆலந்தூர், அசோக் நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்