பாரதப் பிரதமர் மோடியின், 73 -வது பிறந்த நாளையொட்டி, அவரது பிறந்த நாள் விழா நாடு முழுவதும், பாஜகவினர் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக பாஜக சார்பில் கோயம்புத்தூரில் 73 ஜோடிகளுக்கு திருமணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்தி வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று 75 ஜோடிகளின் திருமணம் தமிழ் முறைப்படி நடத்தி வைக்கப்பட்டது. இதில் திருமண ஜோடிகளுக்கு 73 சீர்வரிசைகளோடு, ஒரு நாட்டு பசு சீதனமாக கொடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும், ஏழை, எளியோருக்கு பாஜக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், திருக்கோவில்களில் சிறப்புப் பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
குறிப்பாக, கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில், 73 ஜோடிகளுக்கு இலவச திருமண விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
தமிழ் முறைப்படி, சிவனடியார்கள் முன்னிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திருமணம் நடைபெற்றது.
திருமண விழாவில், மணமகளுக்குத் தாலி, கட்டில், பீரோ உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டது.
புதுமணத் தம்பதிகள் 73 பேருக்கும் நாட்டுப் பசு வழங்கப்பட்டது. இதில், இதில், தம்பதிக்கு, தலைவர் அண்ணாமலை தனது வீட்டில் வளர்த்து வந்த நாட்டுப் பசுவை, திருமணப் பரிசாக வழங்கி கவுப்படுத்தினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளான, கல்யாண விருந்து தயார் செய்தல், சீர்வரிசைப் பொருட்கள் வாங்குதல், தாலி செய்வது, பசுக்களை வாங்குவது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது என மொத்தம் 100 பேர் கொண்ட, 17 குழுவினர் இரவு – பகல் பாராமல் செயல்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை, தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதேபோல, சென்னை, விழுப்புரம், வேலூர், திருச்சி, சேலம், தஞ்சை, திருவாரூர், நாகை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாரதப் பிரதமரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.