விநாயகச் சதுர்த்தியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொண்டாடினார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
முழுமுதற் கடவுள், மூஷிக வாகனன், அனைத்து நற்செயல்களுக்கும் ஆரம்பமாக விளங்கும் எம்பெருமான் விநாயகப் பெருமான் சதுர்த்தி தினம் கொண்டாடும் அனைவருக்கும், @BJP4Tamilnadu சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஔவையாரும், திருமூலரும், அருணகிரிநாதரும், கச்சியப்பரும், இன்னும்… pic.twitter.com/6SWLSpJLYi
— K.Annamalai (@annamalai_k) September 18, 2023
முழுமுதற் கடவுள், மூஷிக வாகனன், அனைத்து நற்செயல்களுக்கும் ஆரம்பமாக விளங்கும் எம்பெருமான் விநாயகப் பெருமான் சதுர்த்தி தினம் கொண்டாடும் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஔவையாரும், திருமூலரும், அருணகிரிநாதரும், கச்சியப்பரும், இன்னும் தமிழ்ப் புலவர்கள் பலரும் போற்றிப் பாடிய எம்பெருமான் விநாயகர், நம் அனைவரின் விக்கினங்களையும் நீக்கி வெற்றியைத் தரட்டும் என்று மனமார வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் மகா கணபதியே போற்றி!