பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வி.களத்தூரில், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டும், திருக்கோவில் முன்பு பிராண்டமான விநாயகர் சிலை வைக்கப்பட்டது. ஊர்வலம் செல்ல காவல்துறையினரிடம் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் மனு அளித்தனர். ஆனால், ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, விநாயகர், சுவாமி சிலையைப் பறிமுதல் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது மக்களை அடித்து உதைத்து காயம் ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இதில், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விநாயகரை வைத்து வழிபட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காகப் பெண்கள் என்றும் பாராமல் அவர்களை அடித்து உதைத்து கைது செய்திருக்கிறது காவல்துறை.
மேலும், இந்து முன்னணி பொறுப்பாளர்களையும் சாலையில் இழுத்துச் சென்று கைது செய்துள்ளனர். இதனால், இந்துகளுக்கு ஏற்பட்ட அநீதியை கண்டித்து, வ.களத்தூர் காவல்நிலையத்தை இந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த அமைப்புகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹிந்து தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகின்றனர். இதனால், பரபரப்பு நிலவுகிறது.