தேனியில், சனாதன தர்மத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியவர்களைக் கைது செய்யாமல், அமைதியான வழியில், எதிர்ப்பு தெரிவித்த இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேனியில் 17 -ம் தேதி அன்று, மாலை 3 மணிக்கு ஈவெராவின் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகம் மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் சேர்ந்து சனாதன ஒழிப்பு பேரணி நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து அமைப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்களை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளது.
மாலை 5 மணி வரை சனாதன ஒழிப்பு பேரணி நடத்தியவர்களை எதுவுமே செய்யாமல் கைக்கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை, இந்து அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குத் தடை விதிக்கும் வகையில், கைது நடவடிக்கை மேற்கொண்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையின் இந்த ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைக்கு, ஹிந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.