முழுமுதற் கடவுளும், ஈசனின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
அன்று வீடுகள் மற்றும் பொது இடங்களில் சிறிய அளவு முதல் பெரிய அளவு வரையிலான விநாயகர் சிலைகளை வாங்கி சிறப்புப் பூஜைகள் செய்து வழிபடுவதும், பின்னர் கடலில் கரைப்பதும் வழக்கமான ஒன்றாகும்.
அந்த வகையில், இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னையில் விநாயகர் சிலைகளைப் பொதுமக்களும், இந்து அமைப்புகளும் ஆர்வத்துடன் வாங்கி சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
சென்னை முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள கோயம்பேடு, விருகம்பாக்கம், தியாகராயநகர், பாரிமுனை, கோடம்பாக்கம், மயிலாப்பூர், அமைந்தகரை, அண்ணாநகர், ஆலந்தூர், கிண்டி உட்பட பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ஏராளமாகக் குவிக்கப்பட்டு உள்ளன. சிறிய களிமண் விநாயகர் சிலைகள் ரூபாய் 150 முதல் ரூபாய் 400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரை அடி முதல் 2 அடி வரையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.