2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவம் 10 பி / 10 பிபி மற்றும் படிவம் ஐடிஆர் -7-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என வருமான வரி துறை தெரிவித்துள்ளது.
2022-23 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கைகளை படிவம் 10 பி / படிவம் 10 பிபியில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 30.09.2023 ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இப்போது மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (சிபிடிடி) 31.10.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கையை ஐடிஆர்-7 படிவத்தில் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.10.2023-ல் இருந்து 30.11.2023 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிந்து கொள்ள www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தை காணலாம்.