கோவையைச் சேர்ந்த பிரபல பைக் ரைடர் டிடிஎஃப் வாசன், விலை உயர்ந்த பைக்குகளில் ஊர் ஊராக வலம் வந்து தனது அனுபவங்களை யூடியூபில் பதிவேற்றுவது வழக்கம்.
இதனால், வாசனுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. யூடியூப் சேனல் மூலம் லட்சங்களில் வருமானம் கொட்டியது.
இந்த நிலையில், இவரது அடுத்த சாகசப் பயணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, வழக்கிலும் சிக்கவைத்துவிட்டது.
ஆம், காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் மேற்கொண்ட வாசன், திடீர் விபத்தில் சிக்கினார். கை, கால்களில் படுகாயம். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிர்ந்துபோன காஞ்சிபுரம் பாலுச்செட்டி சத்திரம் காவல்துறையினர், சீரீயஸ் தன்மை உணர்ந்து, வாசன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், 2 பிரிவுகள் என, ஆக மீது மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யத் தமிழக போக்குவரத்துத்துறை அதிரடியாக பரிந்துரை செய்தது.
இதனால், ஆடிப்போன வாசன், கைதுக்கு பயந்து சென்னையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கினார். ஆனாலும், வாசனை காவல்துறை தட்டித்தூக்கி கைது செய்துள்ளது. பயணங்கள் முடிவதில்லை. ஆம், வாழ்க்கைப் பயணமும்தான்.