10 பைசா வட்டி விடுபவருக்கு மகளிர் உாிமைத் தொகை கிடைப்பதாகவும், ஏழைகளுக்கு கிடைக்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர்.
தமிழக்கத்தில் உள்ள 2.25 கோடி குடும்ப அட்டைதாரர்களில், மகளிர் உரிமைத் தொகைக்காக 1.60 கோடி பெண்கள் விண்ணப்பித்தனர். மேலும் தமிழக அரசு சார்பில் மகளிர் உரிமைத் தொகை கடந்த 15ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
இதில் பல லட்சம் மகளிருக்கு உரிமை தொகை சென்று அடையாமல் பல்வேறு குளறுபடி நடைபெற்றுது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான ரூ.1000 வங்கி மூலம் கிடைக்கப்பெறாத விண்ணப்ப படிவத்தின் நிலையை அறிய இணையதளம் தொடங்கப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் உரிமை தொகை கட்டுப்பாட்டு அறை இ சேவை மையத்தில், இணையதள சேவை முழுமையாக பாதிக்கபட்டதால் ரூ 1000 உரிமை தொகை நிராகரிக்கப்பட்டதன் நிலையை அறிய வந்த ஏராளமான பெண்கள் காத்திருந்துனர். இதனால் ஏறாளமான மகளிர் உரிமை தொகை குறித்து தெரியாமல் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மகளிர் உரிமை தொகை வாடகை வீட்டில் வசிக்போருக்கு ஏழைகளுக்கு கிடைக்கவில்லை வசதி படைத்தோருக்கு கிடைத்ததாக குற்றசாட்டுகளைப் அங்குள்ள பெண்கள் தெரிவித்தனர். மேலும் 10 பைசா, 5 பைசா, வட்டி விடுபவருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைப்பதாகவும், ஏழைகளுக்கு கிடைக்கவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர்.