ஆங்கிலேயர் காலத்து பார்லிமென்ட் கட்டடத்துக்கு விடைகொடுக்கும் வகையில், அதனருகே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, அதிநவீன வசதிகளுடன், புதிய பார்லிமென்ட் கட்டடத்தை கட்டி உள்ளது.
புதிய பார்லிமென்டில் எம்.பி.க்களின் நுழைவு காலை 11:00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியால் வரவேற்கப்பட்டது. இந்த சிறப்பு தினத்தை மறக்க முடியாததாக மாற்றும் வகையில், பார்லிமென்ட், ராஜ்யசபா மற்றும் லோக்சபா ஆகிய இரு அவைகளின் உறுப்பினர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த பரிசில் அரசியலமைப்புச் சட்டத்தின் நகல், ரூ.75 வெள்ளி நாணயம் மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் முத்திரையுடன் கூடிய கையேடு ஆகியவை உள்ளது. அதுமட்டுமின்றி, பார்லிமென்ட் மாளிகையின் முத்திரை உட்பட பல பரிசுகளும் இதில் இருக்கிறது.
இந்த ஆண்டு மே 28 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். செப்டம்பர் 18ம் தேதி முதல் பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தொடர் துவங்கியது. இப்போது புதிய கட்டிடத்தில் இன்று முதல் நடவடிக்கைகள் நடைபெறும். புதிய கட்டிடத்தில் வழக்கமான நாடாளுமன்ற பணிகள் நாளை அதாவது செப்டம்பர் 20 புதன்கிழமை தொடங்கும், இது செப்டம்பர் 22 வரை தொடரும்.