ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இன்று கால்பந்து மற்றும் வாலிபால் விளையாடுகிறது.
சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க உள்ளன.
இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 39 விளையாட்டுப் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடைபெற உள்ளன. இந்த முறை இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டுப் பிரிவில் முதன்முறையாக பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் சில போட்டிகள் மட்டும் செப்டம்பர் 19 முதலே துவங்க உள்ளன. கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகளில் இந்தியா செப்டம்பர் 19 அன்றே பங்கேற்க உள்ளது. இதில் இந்திய ஆடவர் கால்பந்து அணி குரூப் ஏ பிரிவில் பங்கேற்று உள்ளது. அந்த பிரிவில் இந்திய அணியுடன், சீனா, மியான்மர் மற்றும் வங்கதேச அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்திய ஆடவர் வாலிபால் அணி குரூப் சி பிரிவில் பங்கேற்று உள்ளது. அந்த பிரிவில் இந்திய அணியுடன், கொரியா மற்றும் கம்போடியா அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஆடவர் கால்பந்து போட்டியில் இன்று மாலை 5 மணியவில் இந்தியா சீனாவுடன் விளையாடுகிறது. ஆடவர் வாலிபால் போட்டியில் இன்று 4.30 மணிக்கு இந்தியா, கம்போடியாவுடன் விளையாடுகிறது.