தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் சுமார் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரை அடுத்து, தமிழகத்தில் உள்ள முக்கிய தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடத்த வருமானவரித்துறை முடிவு செய்தது.
அதன்படி, செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதாவது, தமிழகம் முழுதும் 40 -க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. தேனாம்பேட்டை வெங்கிடு ரத்தினம் தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது, வருமானவரித்துறையினர் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.