உலகை ஆளும் இந்தியர்கள்
உலகளவில் பெரிய நிறுவனங்களை வழிநடத்துவதிலும், உரிமையாளர்களாக இருப்பதிலும் இந்தியர்கள் கொடிநாட்டி வருகிறார்கள்.
அந்தவகையில், முன்னாள் டெலாய்ட் தலைமை நிர்வாக அதிகாரி புனித் ரஞ்சன் (Punit Renjen) குறித்துப் பார்ப்போம்,
புனித் ரஞ்சன் 1961-ஆம் ஆண்டு ஹரியானாவில் பிறந்தார். ரஞ்சனுக்கு 14 வயதாகும் போது, அவரது தந்தையின் வணிகம் நிதிச் சிக்கலை எதிர்கொண்டது. அவரது குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டது.
தொடர்ந்து, அவரது பெற்றோர்களால் ரஞ்சனின் பள்ளி படிப்பிற்கான கட்டணத்தைக் கூட சரியாகச் செலுத்த முடியவில்லை. அதன் காரணமாக அவர் தனது பள்ளி படிப்பைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது.
அதன் பிறகு பல்வேறு தடைகளைக் கடந்து அவர் ரோதக்கில் உள்ள கல்லூரியில் பட்டம் பெற்று அதன் பிறகு டெல்லியில் வேலை தேடி அலைந்தார். உஷா இன்டர்னேஷனல் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அதன்பின், ரோட்டரி அறக்கட்டளை உதவித்தொகை கிடைத்தது. இதன் மூலம் அமெரிக்காவிற்குச் சென்று ஓரிகன் நகரில் உள்ள வில்லியம்டி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்தார்.
இதைத்தொடர்ந்து, டெலாய்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து, தன்னுடைய கடினமான உழைப்பாலும், சிறந்த அறிவாற்றலாலும் அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்த புனித் ரஞ்சன் டெலாய்ட் குளோபல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். தற்பொழுது, SAP நிறுவனத்தின் தலைவராக பதவியேற்க உள்ளார்.