சென்னை மற்றும் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இரண்டு பேருக்குச் சொந்தமான நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை முதல், தற்போதைய இலாகா இல்லாத திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி என்பவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டை வெங்கிடு ரத்தினம் தெருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோருக்கு நெருக்கமான மின்வாரிய ஒப்பந்த நிறுவனங்களிலும் ஐ.டி சோதனை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது, வருமானவரித்துறையினர் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.