தமிழக சட்டசபையின் கூட்டம் வருகின்ற அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது.
தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந்தேதி கூடுகிறது, சபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இது குறித்து தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத்தை அக்டோபர் மாதம் 9-ந்தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று 2023-2024-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவு தொடர்பான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.