வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட், இனி குரூப் காலில் 32 பேர் வரையும் பேச முடியும்.
உலகளவில் பிரபலமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப் நிறுவனம் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தனது பயனர்களுக்கு பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் இந்தியா மற்றும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் சேனல் என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து தற்போது குரூப் கால் அப்டேட் செய்துள்ளது.
இதுவரை வாட்சப்பில் 15 பேர் மட்டுமே குரூப் கால் மூலம் பேசும் வசதி இருந்தது. அதனை தற்போது மாற்றி இன்னும் கூடுதலாக 32 பேர் வரையிலும் வாட்சப் கால் பேசும்படியான புது அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இன்னும் நிறைய புதிய அப்டேட் வரும் என்று கூறப்படுகிறது.