ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடர் சீனாவில் கோலாலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாகவே தடகளம் போன்ற விளையாட்டுகள் நடைபெறும் இந்த தொடரில் 2014க்குப்பின் முதல் முறையாக கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதால் ருதுராஜ் கைக்கவாட் தலைமையிலான இளம் அணி இத்தொடரில் விளையாட உள்ளது.
காலிறுதி சுற்று:
1. அக்டோபர் 3, அதிகாலை 6.30 மணி : இந்தியா – லீக் சுற்றில் வெல்லும் 1வது அணி
2. அக்டோபர் 3, முற்பகல் 11.30 மணி : பாகிஸ்தான் – லீக் சுற்றில் வெல்லும் 2வது அணி
3. அக்டோபர் 4, அதிகாலை 6.30 மணி : இலங்கை – லீக் சுற்றில் வெல்லும் 3வது அணி
4. அக்டோபர் 4, முற்பகல் 11.30 மணி : வங்கதேசம் – லீக் சுற்றில் வெல்லும் 4வது அணி
அரையிறுதி சுற்று:
அரைஇறுதி 1 : அக்டோபர் 6, அதிகாலை 6.30 மணி : காலிறுதி 1 வெற்றியாளர் – காலிறுதி 4 வெற்றியாளர் அரைஇறுதி 2 : அக்டோபர் 6, முற்பகல் 11.30 மணி : காலிறுதி 2 வெற்றியாளர் – காலிறுதி 3 வெற்றியாளர் அக்டோபர் 7, அதிகாலை 6.30 மணி : வெண்கல பதக்க போட்டி அக்டோபர் 7, முற்பகல் 11.30 மணி : தங்கப்பதக்க போட்டி ( இறுதிப்போட்டி )