ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கால்பந்து போட்டியில் இந்தியாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது சீனா.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற கால்பந்து விளையாட்டில் இந்தியா மற்றும் சீனா அணிகள் போட்டியிட்டன. இதில் சீனா அணி வெற்றிப் பெற்றது.
ஹாங்சோவில் உள்ள சிஎக்ஸ்சி ஜிம்னாசியத்தில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு சில விளையாட்டுப் போட்டிகள் மட்டும் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கால்பந்துப் போட்டி நடைபெற்று. ஆடவர் கால்பந்து அணி குரூப் ஏ பிரிவில் இந்தியா , சீனா, மியான்மர் மற்றும் வங்கதேச அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த பிரிவில் உள்ள இந்தியா மற்றும் சீனா அணிகள் நேற்று போட்டியிட்டன. இதில் ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சீன வீரர்கள் அதிரடியாக விளையாடி கோல்களை போட முயன்றனர். ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் குருமித் ஒரு கோலை தடுத்தார்.அதேபோன்று ஆட்டத்தின் 14-வது நிமிடத்தில் கோல் போடும் வாய்ப்பை சுனில் செற்றி வீணடித்தார். இதிலிருந்து ஆட்டத்தின் 17 வது நிமிடத்தில் சீன வீரர் காவோ முதல் கோலை அடித்தார். இதேபோன்று ஆட்டத்தின் 23ஆம் நிமிடத்தில் சீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் அது தவற விட்டது.
இப்படி ஆட்டம் விறுவிறுப்பாக செல்ல இந்திய வீரர் ராகுல் ஆட்டத்தின் முதல் பாதியில் வழங்கப்பட்ட கூடுதல் நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இந்த நிலையில் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் சீனா இரண்டாவது கோலை அடித்து முன்னிலை பெற்றது. இதனை மீண்டும் சமன் செய்ய இந்தியா கடுமையாக போராடிய நிலையில். சீனா இறுதிக்கட்டத்தில் தாக்குதல் ஆட்டத்தை கடைபிடித்தது அடுத்தடுத்து கோல்களை அடித்தது, இதன் மூலம் ஆட்டம் 5க்கு1 என்ற கணக்கில் சீன அணி வெற்றி பெற்றது.