நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் 3 புலிக் குட்டிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி அருகே உள்ள சின்ன குன்னூர் பகுதியில் ஒரு பெண் புலிக்குட்டி உயிரிழந்ததை வனத்துறையினர் கண்டு பிடித்தனர்.
இந்த, நிலையில், சீகூர் வனச்சரக எல்லையில் மேலும் 2 புலிக் குட்டிகள் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. அதன் உடல்களை மீட்ட வனத்துறையினர், அதில், ஒரு பெண் புலிக்குட்டி உயிருடன் இருப்பதைக் கண்டு பிடித்தனர். அந்த புலிக்குட்டியை பத்திரமாக மீட்ட வனத்துறையினர் முதுமலை கால்நடை மருத்துவர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த 3 குட்டிகளும் பிறந்து 2 மாதங்களே ஆனவை என்பதால், வன ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 புலிக்குட்டிகள் உள்பட 9 புலிகள் இறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே மாதத்தில் 9 புலிகள் இறந்துள்ள சம்பவம், வனத்துறை முறையாகச் செயல்படவில்லை என்பதே காட்டுகிறது. இந்த விவகாரத்தில் மர்மம் நீடிக்கிறது என விலங்குகள் நல ஆர்வலர்கள் திமுக அரசு மீது குற்றம் சாட்டுகின்றனர்.