இந்திய விமானப்படை (IAF) மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீர் அரசு
செப்டம்பர் 22 – ஆம் தேதி முதல் ஜம்மு விமானப்படை நிலையத்தில் விமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் இந்திய யூனியனுடன் இணைந்த 76 ஆண்டுகளை நினைவுகூறவும்
மற்றும் ஜம்மு விமானப்படை நிலையத்தின் வைர விழாவை கொண்டாடவும் இந்த விமான கண்காட்சி நடத்தவுள்ளது.
PRO செய்தி தொடர்பாளரின் (பாதுகாப்பு) இன் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, நிகழ்ச்சியில் ஒரு ஏரோபாட்டிக் இடம்பெறும் எனவும் அதை சூர்யா கிரண் ஏரோபாட்டிக் டீம் (SKAT) காட்சிப்படுத்தவுள்ளது எனவும் இதுவே ஆசியாவின் முதல் 9 ஏர்கிராப்ட் ஏரோபாட்டிக் விமான படையாகும் .
Mi-17 ஹெலிகாப்டர்கள், ஏர் வாரியர் டிரில் டீம்மால் காட்சிப்படுத்தப்படும் (AWDT),
ஆகாஷ்கங்கா டேர்டெவில் ஸ்கைடைவிங் டீம் மற்றும் IAF இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி இதில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.