பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.
சமீபத்தில் ஹிட் கொடுத்து அசத்திய ஜாவான் பட இயக்குனர் அட்லி – பிரியா தம்பதி மற்றும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிகள் இவ்விழாவில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 -ஆம் தேதி வெளியானது . நயன்தாரா தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.75 கோடி வசூல் செய்தது.
இதனையடுத்து பாலிவுட் திரையுலகில் அட்லி மற்றும் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் அட்லி – பிரியா, நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி கலந்து கொண்டனர்.
அதே போல் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார், சல்மான்கான், ஷாகித் கபூர் , அஜய் தேவ்கான்- கஜோல் தம்பதியினர் , ஐஸ்வர்யாக ராய் மகள் ஆராதியாவுடனும் , ரன்வீர் சிங்க் தீபிகா படுகோன், ஆலியா பாட் இயக்குனர் அயான் முகேர்ஜியும், சித்தார்த் மல்ஹோத்ரா – கியார அத்வாணி தம்பதி மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டென்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்களும் விழாவில் பங்கேற்றனர்.
நடிகை ரேகா, நட்சத்திர தம்பதி ரித்தேஷ் தேஷ்முக்-ஜெனிலியா, தயாரிப்பாளர் விது வினோத்
சோப்ரா, கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், அமீர் கானின் குழந்தைகள் ஐரா மற்றும் ஜுனைத் கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாலையில், அம்பானிகள் பிரமாண்டமான விநாயகர் ஆரத்தி செய்த ஒரு வீடியோ பூஜை காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.