சென்னை சி.ஐ.டி. நகரில் 208 கிலோ மைசூர் பாகு, பூந்தியால் உருவான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சென்னையில், புரசைவாக்கம், பாரிமுனை, தியாகராய நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சத்துக்கும் மேலான இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை சி.ஐ.டி. நகரில் கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகும் வகையில் 208 கிலோ மைசூர் பாகில் விநாயகர் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
208 கிலோ கிாரம் எடையில் மைசூர் பாக்கில் செய்த விநாயகர் சிலை, கடலில் கரைக்கும் போது கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகும் வகையில் இந்தச் சிலை அமைத்துள்ளதாக பா.ஜ.கவின் ஓபிசி அணி மாநில செயலாளரான பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த விநாயகர் சிலை சுமார் 12 அடி உயரத்தில் 208 கிலோ மைசூர் பாகு, மற்றும் பூந்தியால் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் செங்கோல் விநாயகரைப் பக்தியுடன் வழிபட்டனர்.