ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21-ம் தேதி சர்வதேச அமைதி தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
24 மணிநேர அகிம்சை மற்றும் போர்நிறுத்தத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அமைதியின் இலட்சியங்களை வலுப்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாக ஐநா பொதுச் சபை அறிவித்துள்ளது. சர்வதேச அமைதி தினத்தின் சின்னமாக அமைதி மணி உள்ளது. இந்த அமைதி மணி 1954 இல் ஜப்பானின் ஐக்கிய நாடுகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. வருடத்திற்கு இரண்டு முறை அமைதி மணி அடிப்பது வழக்கம்.
ஒவ்வொரு வருடமும் உலக அமைதி தினத்திற்கான கருப்பொருள் அமைக்கப்படும். அதுப்போன்று இந்த வருட உலக அமைதி தினத்திற்கான கருப்பொருள், “அமைதிக்கான நடவடிக்கைகள்: உலகளாவிய இலக்குகளுக்கான எங்கள் லட்சியம்” என்பதாகும்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் சர்வதேச அமைதி தினத்தை அர்த்தமுள்ள மற்றும் பல்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள். அதில் மதியம் 12 மணிக்கு ஒரு நிமிட மௌனம் செலுத்துகின்றனர். மதங்களுக்கு இடையேயான உரையாடல்கள் மற்றும் கலாச்சார உரையாடல்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில் அமைதியை பற்றி பாடங்கள் எடுக்கப்படுகிறது. அமைதிக்கான கம்பங்களை நட்டு வைத்து சேவைகள் செய்கின்றனர். தியானம், பிராத்தனை மற்றும் யோகா செய்யப்படுகிறது.
இந்த நாள் அகிம்சை மற்றும் போர்நிறுத்தத்தின் காலமாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வேலைகளை உருவாக்கும், உமிழ்வைக் குறைக்கும் மற்றும் காலநிலை தாக்கங்களை எதிர்க்கும் தன்மையை உருவாக்கும் பசுமையான மற்றும் நிலையான உலகளாவிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த நாள் முயல்கிறது.