திமுக, டாஸ்மாக்கில் எரிசாராயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதிலோ, அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் வழங்குவதிலோ கவனம் செலுத்தவில்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
காங்கேயத்தில் மட்டும் 700 க்கும் மேல் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. தென்னை விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை. டாஸ்மாக்கில் எரிசாராயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதிலோ, அங்கன்வாடி… pic.twitter.com/yDKlcbORHw
— K.Annamalai (@annamalai_k) September 21, 2023
”என் மண் என மக்கள் பயணம்” கொங்கு மண்ணின் இதயப் பகுதியான, கலாச்சாரம், பாரம்பரியம் காக்கும், முருகப்பெருமான் பெயரால் அமைந்த காங்கேயம் மண்ணில் பொதுமக்களின் எழுச்சியான வரவேற்புடன் அற்புதமாக நடந்தேறியது.
கந்த சஷ்டி கவசம் எழுதப்பட்ட சென்னி மலை முருகன் கோவில், சிவன் மலை என ஆலயங்கள் நிறைந்த ஊர். இங்கு காணப்படும் சோழர் காலத்து கல்வெட்டுக்களில், சிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது தெளிவாகிறது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக மூன்று போர்களில் மாபெரும் வெற்றி பெற்ற மாவீரர் தீரன் சின்னமலையின் சொந்த ஊர். என்றும் தேசியத்தின் பக்கம், பாரதத்தின் பக்கம், பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் பக்கம் நிற்கும் மண் என்பதில் சந்தேகமில்லை.
பாரதப் பிரதமர் மோடியின் நல்லாட்சியில், நம் நாடு, உலகமே வியந்து பார்க்கும் முக்கிய நாடாக, பொருளாதாரத்தில் ஐந்தாவது பெரிய நாடாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த 25 ஆண்டுகளில் நம் நாடு, உலகில் முதல் இடம் பிடிக்கும். நமது பிரதமரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சி ஏழை மக்களுக்கான ஆட்சி. இரண்டாவது ஐந்தாண்டு கால ஆட்சி, உட்கட்டமைப்பை மேம்படுத்தி, பாரதத்தின் வளர்ச்சியை வேகப்படுத்திய ஆட்சி, மூன்றாவது ஐந்து ஆண்டு காலம், 2024 – 2029 நமது குழந்தைகளுக்கான ஐந்தாண்டு காலம்.
உலகத்தின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும் நம் நாடு, அடுத்த மூன்று ஆண்டுகளில், 2027 – 28 ல், மூன்றாவது பெரிய நாடாக மாறும். 2047 ஆம் ஆண்டில், உலகத்தின் முதல் நாடாக மாற வேண்டும் என்பது நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு.
இந்தக் கனவு நிறைவேற, ஊழல் இல்லாத, தேசத்தை முன்னிலைப்படுத்துகின்ற கட்சி, ஆட்சியில் இருக்க வேண்டும். தன்னைத் தாண்டி நாட்டை நேசிக்கும் ஒரு தலைவன் இருக்க வேண்டும். நமது பாரதப் பிரதமர் மோடி, ஒன்பதாண்டு காலமாக, தேசத்தை நேசிக்கும் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். நமது குழந்தைகளுக்கான நல்ல எதிர்காலத்தை உருவாக்க, 2024 பாராளுமன்றத் தேர்தலில், நாம் அனைவரும் நமது பிரதமர் அவர்களது கரங்களை வலுப்படுத்தி, மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும்.
தமிழகத்தில் 29 மாதங்களாக, ஆட்சி நடத்துகிற திமுகவைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சி நடத்துகிறார்கள். ஒரு பக்கம், லஞ்சம் ஊழல் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத நம் பிரதமரின் ஆட்சி, இன்னொரு பக்கம், 29 மாதங்களில், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் திமுக ஆட்சி. எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என தமிழகத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். என் மண் என் மக்கள் பயணத்தில், 60 சட்டமன்றத் தொகுதிகளில், செல்லும் இடங்கள் எல்லாம் பெருகும் மக்கள் ஆதரவைப் பார்க்கும்போது, மக்கள் விரும்பும் ஆட்சியை திமுக தரவில்லை என்பது தெளிவாகிறது. மக்கள் நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். அதனை பாஜகவால் தர முடியும் என்று நம்புகிறார்கள்.
பாரதப் பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக 400 எம்பிக்களுடன் ஆட்சி அமைக்க, தமிழகமும் பெரும் துணையிருக்கும் என்பது தெளிவாகிறது. காங்கேயத்தில் மட்டும் 700 க்கும் மேல் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. தென்னை விவசாயிகளுக்கு திமுக அரசு எந்த நலத்திட்டங்களும் கொண்டு வரவில்லை.
டாஸ்மாக்கில் எரிசாராயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதிலோ, அங்கன்வாடி குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் வழங்குவதிலோ கவனம் செலுத்தவில்லை.
சோதனை அடிப்படையில், ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் கொடுப்போம் என்று சொன்னார்கள். ஆனால் செய்யவில்லை. 2014 ஆம் ஆண்டு, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்போது,ஒரு கிலோ 52.50 ரூபாயாக இருந்த கொப்பரைத் தேங்காய் , இன்று குறைந்த பட்ச ஆதார விலை 108 ரூபாயாக, இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு, மட்டை உரித்த தேங்காய் ஒரு கிலோ ரூபாய் 29.30க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சொன்னது.
ஆனால், திமுக அரசு இன்னும் அதனை நிறைவேற்றாமல், தனியாரிடம் வாங்குகிறார்கள். விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. திமுகவின் விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கு தொடர்கிறது. பருப்புக்கும், தேங்காய்க்கும் மற்ற மாநிலங்களில் செஸ் வரி இல்லை. ஆனால் தமிழகத்தில் விவசாய விரோத திமுக அரசு, ஜிஎஸ்டிக்கு மேல், 1% செஸ் வரி விதிக்கிறார்கள்.
இதனை நீக்க வேண்டும் என்ற தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கைக்கு, பாஜக துணை நிற்கும். சிவன் மலை கிரிவலப் பாதையில் கிரானைட் குவாரி வரக் கூடாது என்ற பொதுமக்களின் போராட்டத்தில் தமிழக பாஜக என்றும் மக்களுடன் துணை இருக்கும் என்ற உறுதி அளிக்கிறோம்.
திமுகவின் பாதி ஆட்சிக் காலம் முடிந்து விட்டது. ஆனால், திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன, நெசவாளர்களுக்கு தனி கூட்டுறவு சங்கம்,பள்ளிச் சீருடை நெசவாளர்களிடம் நேரடி கொள்முதல், நூல் கொள்முதல் என ஒன்றையும் நிறைவேற்றவில்லை. ஜல்லிக்கட்டு நடக்க முக்கியக் காரணம் நமது பிரதமர் மோடி அவர்கள். காங்கிரஸ் திமுக கூட்டணியில், ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டி விளையாட்டு என்று தடை செய்தார்கள். மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் வாதாடி ஜல்லிக்கட்டு தடையை நீக்கியிருக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற திமுகவின் வாக்குறுதி எண் 373 என்ன ஆனது? மகளிர் உரிமைத் தொகை 60% குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படவில்லை. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, ஜாதிக் கலவரம், லஞ்ச ஊழல், என்று தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்திருக்கிறார் நமது பிரதமர் மோடி.
கடந்த 15 ஆண்டு காலமாக, பாஜகவில் 33% இட ஒதுக்கீடு இருந்து வருகிறது. பெண்களால் அரசியல் மேன்மையும் தூய்மையும் வரும் என்பது பிரதமர் மோடியின் நம்பிக்கை. ஆனால், ஸ்டாலின் இதற்கும் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்.
திமுகவின் 34 அமைச்சர்களில் 2 அமைச்சர்கள்தான் பெண்கள். திமுக வேட்பாளர்களில் 2016 ஆம் ஆண்டு, 18 பெண்கள், 2021 – 12 பெண்கள் மட்டுமே. அரசியல் பின்புலம் இல்லாத சகோதரிகளை பாஜக அரசியலுக்குக் கொண்டு வருகிறது. ஆனால், கனிமொழி, கீதா ஜீவன் உள்ளிட்ட குடும்ப அரசியலுக்குத்தான் திமுகவில் என்றும் இட ஒதுக்கீடே தவிர மகளிருக்கான உண்மையான இட ஒதுக்கீடு இல்லை.
காங்கேயம் என்றும் தேசியத்தின் பக்கம், பாரதத்தின் பக்கம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பக்கம்,என்பதை, வரும் பாராளுமன்றத் தேர்தலில் நிரூபிப்போம். மூன்றாவது முறையாக மோடி பிரதமராகப் பொறுப்பேற்கத் துணை நிற்போம் எனத் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.