முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவேந்தன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்பு பாஜகவில் இணைந்தார்.
பழநி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் திரு ஆயக்குடி தா. பூவேந்தன் அவர்கள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியாலும், தலைமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட @BJP4Tamilnadu தலைவர் அண்ணன் திரு @Palanikanagaraj… pic.twitter.com/ssI0lSm1t9
— K.Annamalai (@annamalai_k) September 22, 2023
பழநி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அண்ணன் ஆயக்குடி தா. பூவேந்தன், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியாலும், தலைமைப் பண்புகளாலும் ஈர்க்கப்பட்டு, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணன் பழனி கனகராஜ் முன்னிலையில், கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அண்ணன் பூவேந்தனை மனமார வரவேற்று மகிழ்கிறோம். அவரது வருகை, தமிழக பாஜகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.