சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஜம்மு நீதிமன்றம் கிரிமினல் வழக்கு விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
சென்னையில் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை அழித்து ஒழிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும், அமைச்சர் உதயநிதி மீது நாட்டில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், சனாதன தர்மத்திற்கு எதிராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஜம்மு நீதிமன்றம் கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. மேலும், ஜம்முவின் மூத்த காவல் கண்காணிப்பாளரை விசாரணை அதிகாரியாக நீதிமன்றம் நியமித்துள்ளது.
Jammu Court initiates Criminal Proceedings against Udayanidhi Stalin for his vitriol against “Sanatan Dharma”.
Court has appointed Senior Superintendent of Police (SSP) Jammu as the Enquiry Officer.
I congratulate Sh. Atul Raina; Sh. Pankaj Sharma & Sh. Nikhil Narayan (… pic.twitter.com/IDHuoX5giY
— Ankur Sharma (@AnkurSharma_Adv) September 22, 2023
உதயநிதிக்கு எதிராக, ஏகம் சனாதன பாரத தளத்தின் உறுப்பினர் அதுல் ரெய்னா உள்ளிட்ட மூன்றுபேர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்றும், இதற்காக, உதயநிதி ஸ்டாலின் ஜம்முவில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, பல்வேறு நீதிமன்றங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், ஜம்முவில் தொடரப்பட்ட வழக்கு, கடும் நெருக்கடியை கொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.