கன்னியாகுமரியில் புகழ் பெற்ற பகவதி அம்மன் திருக்கோவிலில் கணபதி ஹோமம் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்தில் வரும் மாதம் இறுதியில் ராஜகோபுரம் கட்டும் பணி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், ராஜகோபுர பணியில் எந்தவித தடங்கலும் இன்றி நல்ல முறையில் நடப்பதற்காக வேண்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று கணபதி ஹோமம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, மிருத்யுஞ்சய ஹோமமும் நடைபெற்றது. இந்த ஹோமத்தை மணலிக்கரை மாத்தூர் மடம் தந்திரி சஜித்சங்கர நாராயணரூ நடத்தினார்.
பின்னர், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் கன்னி மூலையான வெளி சுற்று பிரகாரத்தில் உள்ள தென்மேற்கு பகுதியில் கோவிலின் தலவிருச்சமான சந்தன மரம் நடப்பட்டது.