செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.108 திவ்ய தேசங்களில் 63 -வது தேசமாக இந்த திருக்கோவில் விளங்கி வருகிறது.
இந்த ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். தற்போது, இந்த திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதற்காகக் திருக்கோவில் வளாகத்திலிருந்த 25 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்றை இரவோடு இரவாக வெட்டியுள்ளனர் அதிகாரிகள். இன்று காலையில் வந்து பார்த்த போது, மரத்தின் அடிவேரோடு வெட்டப்பட்டிருந்தது கண்டு பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பக்தர்கள் இளைப்பாறும் இடமாகவும், ஆட்டோ ஓட்டுநர்கள் இளைப்பாறும் இடமாகவும் விளங்கி வந்தது.
இதனால், மரம் வெட்டப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி பொது மக்களும், பக்தர்களும் , ஆட்டோ ஓட்டுநர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், அங்கு, மெழுகுவர்த்தி ஏந்தி பால் ஊற்றினர்.