திண்டுக்கல் பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி வரும் 2024 ஜூன் மாதத்தில் முடிவு பெறும் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
”என் மண் என் மக்கள் பயணம்” தமிழக அரசியல் மாற்றத்திற்கான புதிய குறியீடு உருவாகியிருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு, எழுச்சி மிகுந்த மக்கள் சூழ, உடுமலைப்பேட்டையில் நடந்தேறியது.
சக்கரம் போல் மலைகளால் சூழப்பட்டு இருப்பதால், முற்காலத்தில் சக்கரகிரி என்றழைக்கப்பட்டது. இங்குள்ள மலைகளில் நிறைய உடும்புகள் வசித்து வந்ததால் உடும்பு மலைப் பேட்டை என்று அழைக்கப்பட்டு தற்போது உடுமலைப்பேட்டை ஆகியிருக்கிறது.
உடுமலை என்றாலே விவசாயம் தான். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுவட்டாரத்தில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பில் தென்னை, வாழை, மா, பாக்கு உள்ளிட்ட மர பயிர்கள், மக்காச்சோளம், சோளம், கம்பு, உளுந்து, கொள்ளு உள்ளிட்ட பயறுவகை பயிர்கள், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்கள், தக்காளி, கத்தரி, வெண்டை, பீட்ரூட், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
உடுமலையை அடுத்துள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மாங்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு செய்யப்படும் மாங்காய் வடு மாங்காய் ஊறுகாய் சுவை மிகப் பிரசித்தம். பொங்கல் விழாவின்போது நடக்கும், உடுமலை ரேக்ளா ரேஸ் மிகவும் பெயர் பெற்றது.
கொங்கு… pic.twitter.com/cmfxVZILkF
— K.Annamalai (@annamalai_k) September 23, 2023
உடுமலையை அடுத்துள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் மாங்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு செய்யப்படும் மாங்காய் வடு மாங்காய் ஊறுகாய் சுவை மிகப் பிரசித்தம்.
பொங்கல் விழாவின்போது நடக்கும், உடுமலை ரேக்ளா ரேஸ் மிகவும் பெயர் பெற்றது. கொங்கு நாட்டின் கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் அளவுக்கு, நிறைய திரைப்படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெறுவதுண்டு.
1960களில் பிரபலமாக இருந்த திரைப்படப் பாடலாசிரியர் உடுமலைப்பேட்டை நாராயண கவி, தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த அண்ணன் கவுண்டமணி, எல்லாரும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர்கள். கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகும், பச்சைப் பசேல் என இருக்கும் வயல்களும் இங்கு அதிகம்.
நமது பாரதப் பிரதமர் மோடி, புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறந்து வைக்கும்போது, தமிழ் பக்திப் பாடல்களான தேவாரம், கோளறு பதிகம் பாடி, சோழர்களின் செங்கோலை, சபாநாயகர் இருக்கைக்கு மேல் வைத்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நிகழ்வில், தேவாரம் பாடியவர்களில் ஒருவர் நமது உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த உமா நந்தினி என்னும் சிறுமி என்பது நமக்கெல்லாம் பெருமை.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகிலுள்ள சின்னவீரம்பட்டி பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வரும் சகோதரி தாயம்மாள், மற்றும் சாதாரண கூலித் தொழிலாளியான அவரது கணவர் ஆறுமுகம் (எ) அய்யாவு ஆகியோர், வறுமையான குடும்பப் பின்னணியிலும், தங்கள் குழந்தைகள் படித்து வரும் சின்னவீரம்பட்டி நடுநிலைப் பள்ளியின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காக, இளநீர் விற்று சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்தார்கள்.
ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக தாயம்மாள் அக்கா செய்த உதவியை, நமது பாரதப் பிரதமர் மோடி, அவரது மனதின் குரல் நிகழ்ச்சியில் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறிப்பிட்டு புகழ்ந்து பேசினார்.
நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனிதர்களின் வளர்ச்சி. நமது கலாச்சாரத்தின் வளர்ச்சி. சகோதரி நந்தினி, சகோதரி தாயம்மாள் இவர்கள் நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள். மத்திய அரசின் கேந்திர வித்தியாலயா பள்ளி உடுமலைப்பேட்டையில், 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி முதல், செயல்பட்டு வருகிறது.
உலக நாடுகள் பங்கேற்ற G20 மாநாடு நடந்த பாரத் மண்டபம் வாசலில், நமது தமிழகத்தில் உருவாக்கப்பட்ட உலகிலேயே உயரமான நடராஜர் சிலையை வைத்து, தமிழ் கலாச்சாரத்தை உலக அரங்கில் பெருமைப்படுத்தியிருக்கிறார் நமது பிரதமர்.
திண்டுக்கல் பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி வரும் 2024 ஜூன் மாதத்தில் முடிவு பெறும். மொத்தம் 131.9 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த சாலை, மூன்று பகுதிகளாக, கமலாபுரம் ஒட்டன்சத்திரம், ஒட்டன்சத்திரம் – மடத்துக்குளம், மடத்துக்குளம் பொள்ளாச்சி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வேலை நடந்து கொண்டிருக்கிறது. இதற்கான மத்திய அரசு செலவிடும் தொகை 3,649 கோடி. இந்த நெடுஞ்சாலை, உடுமலைப்பேட்டை வழியாகச் செல்லும்.
மோடியின் முகவரி: உடுமலைப்பேட்டை விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்க உதவும் மத்திய அரசின் FPO குழு மூலம் பயன்பெற்ற தங்கராஜ் , முத்ரா திட்டத்தின் கீழ் பயன்பெற்று சொந்தமாக, வாகனம் வாங்கி பயனடைந்த நித்யானந்தன், சாலையோர சிறு வணிகர்களுக்கான சுவநிதி திட்டத்தின் மூலம் பயனடைந்த சசிகலா, பிரதமரின் விவசாயத்துக்கான நீர்ப் பாசனத் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற சிவக்குமார், தூய்மை இந்தியா திட்டம் மூலம் கழிப்பறை வசதி பெற்றுள்ள கோமதி, உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு இணைப்பு பெற்று பயனடைந்துள்ள இந்திராணி, பிரதம மந்திரி விவசாயிகள் செழிக்கும் திட்டம் மூலம் பயனடைந்துள்ள டாக்டர் அகிலா சாந்தினி. இவர்கள் தான் பாரதப் பிரதமர் மோடியின் முகவரி.
மக்கள் விரோத, திருட்டு ஊழல் திமுகவை, வரும் பாராளுமன்ற தேர்தலில் முழுமையாகப் புறக்கணிப்போம். தமிழுக்கும் தேசத்துக்கும் பெருமை சேர்க்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்க, தமிழகமும் துணையிருப்போம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.