தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சரிடம் நேரடியாக தாம் வைத்த கோரிக்கையை ஏற்று, வந்தே பாரத் ரயில் விடப்பட்டுள்ளது என்றும், இதை தொடங்கிவைக்கும் பாரதப் பிரதமர் மோடிக்கு, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.
தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் நேரடியாக நான் வைத்த கோரிக்கையை ஏற்று
சென்னை – திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் விரைவு இரயில்சேவையை விரைந்து நடவடிக்கை எடுத்து செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி தென் தமிழக மக்களின் பயணங்களை… pic.twitter.com/DmOC9Qy9Wo— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) September 22, 2023
இது தொடர்பாக, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமது எக்ஸ் பதிவில், இது தொடர்பாக அவர் தமது எக்ஸ் பதிவில், தென்தமிழக மக்களுக்காக மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் நேரடியாக நான் வைத்த கோரிக்கையை ஏற்று, சென்னை – திருநெல்வேலி இடையிலான வந்தே பாரத் விரைவு இரயில்சேவையை விரைந்து நடவடிக்கை எடுத்து செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி தென் தமிழக மக்களின் பயணங்களை எளிதாக்கிய மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும் மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.