1951 செப்டம்பர் 23 அன்று உலக காதுகேளாதோர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நாளை அங்கீகரிக்கும் விதமாக இந்நாளே சர்வதேச சைகை மொழி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலகின் முதல்மொழி என்று கூறப்படுவைத்து சைகை மொழி. சர்வதேச சைகை மொழிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சைகை மொழிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சைகை மொழிகளின் நிலையை வலுப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. மேலும், செப்டம்பர் கடைசி வாரம் முழுவதும் சர்வதேச காது கேளாதோர் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உள்ள மொழிகளில் மூத்த மொழி சைகை மொழியாகும். இந்த சைகை மொழியில் பேசிய பிறகு தான் வடிவ எழுத்துக்கள் தோன்றின எனவும் அதன் பின்னரே அனைத்து மொழிகளும் தோன்றின எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வரை 300 விதமான சைகை மொழிகள் பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.