ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் வாலிபால் காலிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
சீனா ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வாலிபால் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் சீன தைபே அணிகள் விளையாடியது.
இதில் இந்திய அணி 25-22 , 25-21, என்ற செட் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
லீக் சுற்றின் தரவரிசை பட்டியலில் ஜப்பான் அணி முன்னிலை பெற்றுள்ளது. காலிறுதி போட்டியில் இந்தியா அணி ஜப்பான் அணிகள் விளையாடிவருகின்றனர்.