2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை வென்று வருகிறது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்துக்கொண்டு வருகிறது. இதில் இந்திய அணி பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வருகிறது.
இதில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணியில் மெஹுலி கோஷ், ரமிதா ஆஷி சௌக்சே ஜோடி, ஆகியோர் பங்குபெற்றன.
இதில் ரமிதா 631.9 புள்ளிகளும் மெஹுலி 630.8 புள்ளிகளும் ஆஷி 623.3 புள்ளிகளும் பெற்றனர். மொத்தமாக இந்தியா 1886 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றது.
மேலும் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிப்பட்டப் போட்டியில் ரமிதா வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார். பதக்கங்களை வென்ற இந்திய அணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனைகளான ரமிதா, மெஹுலி கோஷ் மற்றும் ஆஷி சௌக்சி ஆகியோருக்கு வாழ்த்துகள், இவர்கள் மூவரும் நம் தேசத்தை பெருமைப் படுத்தியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.