தமிழகத்தில் இரயில்வே திட்டங்களுக்கு ரூ.6.080 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை – சென்னை இடையேயான வந்தே பாரத் இரயிலின் சேவையை, இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 11 மாநிலங்களை இணைக்கும் வகையில் 9 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்படுகின்றன.
#IndianRailway has allocated a record allocation of ₹6,080 crores for Tamil Nadu for the current year and is working on modernizing 75 railway stations of the state to world-class. Works worth ₹35,580 crores are already in progress. pic.twitter.com/bUOTTwS4rL
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) September 24, 2023
இந்த நிலையில், மேதகு ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியன் ரயில்வே நடப்பு ஆண்டில் தமிழகத்திற்கு 6,080 கோடி ரூபாய் ஒதுக்கி சாதனை படைத்துள்ளது. மாநிலத்தின் 75 இரயில் நிலையங்களை உலகத் தரத்திற்கு நவீனமயமாக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரூ.35,580 கோடி மதிப்பிலான பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டு மக்கள் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திரமோடி தங்கள் மீது கொண்டுள்ள அன்புக்காகவும் திருநெல்வேலி-மதுரை-சென்னை மற்றும் சென்னை விஜயவாடா இடையே இரண்டு வந்தேபாரத் ரயில் சேவைகளை மாநிலத்துக்கு வழங்கியதற்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.