நெல்லை சென்னை இடையே வந்தே பாரத் இரயில் சேவை குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளளைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “மரியாதைக்குரிய பாரத பிரதமர் அவர்கள் எந்தெந்த வகையில் எல்லாம் இந்த நாட்டை முன்னேற்ற முடியுமோ அதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
’ரேடியோவை‘ நாம் மறந்திருந்த காலத்தில் ‘மன் கி பாத்’ மூலம் அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார். அதேபோல் போஸ்ட் ஆபீஸ் நாம் மறந்த போது செல்வமகள் திட்டம் மூலம் அனைத்து தரப்பு மக்களிடமும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த அதனை மக்களிடம் எடுத்துச் சென்றுள்ளார்.
அது போல் தான் இரயில் என்றாலே மிக தாமதமாகச் செல்லும். அதனால் இரயிலில் போக முடியாது என நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இரயிலில் பழமை இருக்கும். ஆனால், புதுமையாக வேகத்தை அதிகரிப்போம் என இந்த திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்.
வந்தே பாரத் இரயில் நெல்லைக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம். நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் இரயில் சேவை தொடங்குவதற்கு நானும் ஒரு காரணம்.
ஐதராபாத்தில் முதல் குடிமகனாக வந்தே பாரத் இரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க திட்டமிருந்தது. ஆனால், நான் சாதாரணக் குடிமகனாக உணர்வு பூர்வமாக இந்த நிகழ்வில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளேன்.
முதலமைச்சர் இன்று ஒன்றைச் சொல்லி இருக்கிறார். அதாவது பிரதமர் ஐந்து டீ-யை முன்னிலைப்படுத்தினார்.
டேலண்ட், டூரிசம், டெக்னாலஜி, ட்ரேட் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தினார். ஆனால் எதுவுமே இப்பொழுது இல்லை என கூறி உள்ளார்.
ஆனால், டேலண்ட்-னால தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. டெக்னாலஜி-னால தான் இந்த வந்தே பாரத் வந்து இருக்கிறது. டூரிசம் மேம்படுத்துவதற்குத்தான் வந்தே பாரத் வந்துள்ளது. ட்ரேட் எனப்படும் வியாபாரத்தை மேம்படுத்துவதற்குத் தான் வந்தே பாரத் வந்துள்ளது.
நீங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என சொன்னீர்கள். ஆனால் அத்தனை டீ-யையும் செயல்படுத்தித் தான் இந்த வந்தே பாரத் இரயில் வந்துள்ளது. எனவே, இதுவே ஒரு உதாரணம்” என்று கூறியுள்ளார்.