விவசாயிகளுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 15 -வது தவணை நவம்பர் அல்லது டிசம்பர் மாத இடையில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தகுதியான விவசாயிகளுக்கும் ஆண்டு தோறும் ரூ.6,000 வழங்கப்படுகிறது.
வருடத்தில் 3 தவணைகளில் ரூ.2000 என்ற வீதம் இந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் 14-வது தவணை கடந்த ஜூலை 27 -ம் தேதி வழங்கப்பட்டது. 15-வது தவணை, அடுத்து வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் இடையில் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.