சென்னை அடுத்துள்ள எண்ணூரில் மின் விரிவாக்கத் திட்டப் பணிகள் குறித்து, தமிழக மின்வாரிய அதிகாரிகள் மத்திய அரசிடம் தவறான தகவல்களையும், புள்ளி விவரங்களையும் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய மின்சார ஆணையத்தின் கீழ் இயங்கும் தென் மாநில மின்சாரக் குழுவின் துணைக் குழுக் கூட்டம் கர்நாடகா மாநிலம் மடிகெரியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், சென்னை அடுத்துள்ள எண்ணூரில் உள்ள மின் விரிவாக்க மையம் வரும் 2025-ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இந்த தகவல் தவறானது எனத் தெரிவித்துள்ள தொழிற்சங்க தலைவர்கள் சிலர் கூறுகையில், தமிழக மின்வாரியம…
[10:56 am, 24/09/2023] Vadivel Jtv: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் – நடனம் ஆடிய இளைஞர் கைது
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஹிஜாப் உடை அணிந்து நடனம் ஆடிய இளைஞரை விருதம்பட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் விருதம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழிஞ்சூர் பகுதியில் கடந்த 21 -ம், தேதி மாலை சுமார் 4 மணியளவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது, கழிஞ்சூரைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரின் மகன் அருண்குமார் (23) என்பவர் ஹிஜாப் உடை அணிந்து திரைப்பட பாடலுக்கு அவரது நண்பர்களுடன் சேர்த்து நடனம் ஆடியுள்ளார். இதை அங்குள்ள இளைஞர்கள் சிலர் தங்களது செல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து, கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் தங்கராஜ் விருதம்பட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அளித்தார். அதன்பேரில் விருதம்பட்டு காவல் நிலையத்தில் அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில், அருண்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.