இன்று உலகமே நவீனமயாகி வருகிறது. குறிப்பாக, யாருமே இதுவரை கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாத அளவு செல்போன்களில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதனாலேயே, இன்று ஒவ்வொரு மனிதர்களிடமும் செல் போன் மற்றும் ஸ்மார்ட்போன் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது.
இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் குரூப் காலிங் அம்சத்தை மேம்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, வாட்ஸ் அப் தற்போது 31 நபர்களுடன் குரூப் கால்கள் செய்து பேசமுடியும் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, WABteaInfo வழங்கிய அறிக்கையின்படி, இனி 31 நபர்களுடன் குரூப் கால் செய்யலாம்.
இதற்கு முன்பு வாட்ஸ் அப்பில் 15 பேர் கொண்ட குரூப் கால்கள் மட்டுமே பேசமுடியும். தொடக்கத்தில், 7 பேர் மட்டுமே குரூப் கால்களில் பேசும்படியாக இருந்தது. ஆனால் தற்போது அதன் எண்ணிக்கையை 31 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.