இரயில்வே துறையில் வரலாறு காணாத மாற்றம்: ஜெ.பி.நட்டா பெருமிதம்!
Sep 22, 2026, 05:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரயில்வே துறையில் வரலாறு காணாத மாற்றம்: ஜெ.பி.நட்டா பெருமிதம்!

ஆத்ம நிர்பர் பாரத் இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 24, 2023, 08:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக் கண்டிருப்பதாகவும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.

இரயில்கள் மற்றும் இரயில் நிலையங்களின் தரம், சேவை உள்ளிட்டவற்றை உயர்த்தும் வகையில், அதிநவீன வசதிகளுடன் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, இரயில் நிலையங்களும் அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஏற்கெனவே 25 வந்தே பாரத் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, 500-க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்கள் லிப்ஃட், எஸ்கலேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நெல்லை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில் உட்பட 9 வழித்தடங்களில் இயங்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்தபடியே காணொளிக் காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் இரயில்கள் மூலம் பயண நேரம் குறையும் என்று கூறியதோடு, அமிர்த காலத்தில் கட்டப்படும் இரயில் நிலையங்கள் அமிர்த பாரத நிலையங்கள் என்று அழைக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த சூழலில்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்திய இரயில்வே வரலாறு காணாத மாற்றத்தைக கண்டிருப்பதாக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஜெ.பி.நட்டா வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்று 9 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மேம்பட்ட மற்றும் உள்நாட்டு தயாரிப்பான இரயில், இந்தியாவில் இரயில் பயணத்தின் இயக்கவியலை மாற்றி இருக்கிறது. மேலும், இது ஆத்ம நிர்பர் பாரத் என்கிற நமது இலக்கை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இரயில்வேயின் முன்னேற்றங்கள் புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும். வளர்ந்த இந்தியாவை அடைவதில் முன்னேற்றம் அடைய உதவும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் எங்கள் இரயில்வே முன்னோடியில்லாத மாற்றத்தைக் கண்டிருக்கிறது. மேலும், எங்கள் இரயில் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும், எங்கள் மக்களின் பயணத்தை எளிதாக்குவதிலும் நாங்கள் விரைவான முன்னேற்றத்தை அடைந்திருக்கிறோம். அமிர்த காலத்தில் நாங்கள் எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, ​​மகத்தான முன்னேற்றங்களை அடைகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: PM Modivande bharat trainPraisedJ.P.Nadda
Share
Tweet
SendShare
Previous Post

வாட்ஸ் அப் புதிய அப்டேட் : குரூப் கால்களில் இனி 31 பேர் பேசலாம்

Next Post

நீதி வழங்குவதில் தாமதம்: அமித்ஷா கவலை!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies