இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் - சிறப்பு தொகுப்பு!
Sep 23, 2026, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 7, 2026, 10:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 

குஜராத் எல்லையில் உள்ள சர் க்ரீக் (Sir Creek) பகுதியில் பாகிஸ்தான் தனது கடற்படை மற்றும் ராணுவ உள்கட்டமைப்பைத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. சீனா மற்றும் துருக்கியின் உதவியுடன் புதிய கடற்படைச் சாவடிகள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் சிறப்புப் படைகளைக் குவித்து வருவதுடன், ‘அபாபீல்’ (Ababeel) என்ற பெயரில் புதிய பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சர் க்ரீக் (Sir Creek) என்பது குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள 96 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு அலை முகத்துவாரமாகும்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இந்த இயற்கையான எல்லைப் பகுதி ஆசியாவின் மிகப்பெரிய மீன்பிடித் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் அதிகம் கொண்ட இந்தப் பகுதி முழுமையும் தனக்கே சொந்தம் என்று பாகிஸ்தான் கூறிவருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையை நிர்ணயிக்கும் சர்வதேச எல்லைச் சட்டமான தால்வெக் கோட்பாடு (Thalweg Principle) அடிப்படையில் படகு போக்குவரத்து நடக்கும் நடுகூட்டுப் பகுதியில் எல்லை பிரிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவருகிறது.

பாகிஸ்தானின் வர்த்தகத் தலைநகரமும், துறைமுக நகரமுமான கராச்சி மற்றும் முக்கிய கடற்படைத் தளமான பி.என்.எஸ் காசிம் ஆகியவற்றிலிருந்து வெறும் 200 கிலோமீட்டர் தொலைவில் சர் க்ரீக் அமைந்துள்ளது. அதே போல் இந்தியாவின் காண்ட்லா, முந்த்ரா மற்றும் மாண்ட்வி உள்ளிட்ட மிகப்பெரிய துறைமுகங்கள் கட்ச் வளைகுடாவில் இந்தப்பகுதியில் தான் அமைந்துள்ளன.

இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் ஒரு முக்கியமான எல்லைப் பிரச்சனையாக அமைந்துள்ள இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு மே 8ம் தேதி இரவு, லே முதல் சர் க்ரீக் வரையிலான 36 இடங்களில், சுமார் 400க்கும் மேற்பட்ட துருக்கியின் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சி செய்தது.

இது இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிக்கும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் மூலம் பதிண்டா ராணுவ முகாமைத் தாக்க முயன்றதாகவும் தெரிவித்த விங் கமாண்டர் வியோமிகா சிங், இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள நான்கு வான் பாதுகாப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்நாட்டின் ஒரு வான் பாதுகாப்பு ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு அத்துமீறலும், “வரலாற்றையும் புவியியலையும் மாற்றக்கூடிய” கடுமையான இந்தியப் பதிலடியை வரவழைக்கும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் National Strategic Command என்ற அமைப்பை உருவாக்கிய பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், இந்த ஒருங்கிணைந்த கட்டளையின் கீழ் பாகிஸ்தானின் முப்படைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

இதன் ஒருபகுதியாக சர் க்ரீக் (Sir Creek) பகுதியில், சீனா மற்றும் துருக்கியின் உதவியுடன் பாகிஸ்தான் புதிய வான் மற்றும் கடல் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

“Ababeel – The Divine Strike”. “அபாபீல் – தி டிவைன் ஸ்ட்ரைக்” என்ற புதிய திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் கடற்படை தனது கடற்படை சிறப்பு சேவை குழு (SSG-N) கமாண்டோக்களை சர் க்ரீக்கில் நிலைநிறுத்தியுள்ளது. SSG-N என்பது கடல், வான் மற்றும் தரைவழி என அனைத்துத் தளங்களிலும் அதிக ஆபத்துள்ள பணிகளை மேற்கொள்ளப் பயிற்சி பெறும் ஒரு கடல்சார் சிறப்பு நடவடிக்கைப் படை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட புதிய துருக்கி ட்ரோன்கள், நவீன சீன hovercraft ஹோவர்கிராஃப்ட்கள், அதிவேகக் கடற்படைப் படகுகள் மற்றும் அதிநவீன ராக்கெட் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பாகிஸ்தான் சர் க்ரீக் (Sir Creek) பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.

உளவு பார்த்தல் மற்றும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட துருக்கி ட்ரோன்களை அதிக அளவில் சர் க்ரீக் (Sir Creek) பகுதியில் பாகிஸ்தானால் களமிறக்கப்பட்டுள்ளன

பாகிஸ்தானுக்கு முதல் ஹங்கோர்-வகை நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ள சீனா அந்நாட்டுக்கு அரபிக்கடலில் மறைந்திருந்து தாக்கும் மேம்பட்ட திறனையும், இரண்டாவது தாக்குதல் நடத்தும் ஆற்றலையும் வழங்கியுள்ளது.

மேலும் பாகிஸ்தானுக்கு துக்ரில் வகைப் போர்க்கப்பல்களையும் சீனா வழங்கியுள்ள நிலையில், சர் க்ரீக் நதிக்கரைப் பகுதிக்கு அருகிலுள்ள பந்தா தோரா மற்றும் ஹராமி தோரா பகுதிகளுக்கு இடையில் பல கடல்சார் பாதுகாப்பு நிலைகளைப் பாகிஸ்தான் கடற்படை அமைத்துள்ளது.

சர்ச்சைக்குரிய சதுப்பு நிலமான சர் க்ரீக் பகுதிகளில் பாகிஸ்தான் தனது ராணுவத்தை குவித்து வருவதாலும் இந்தியா “தீர்க்கமான பதிலடி” கொடுக்கும் என எச்சரித்துள்ளதாலும், இருநாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

Tags: Kutch region.​​Gujarat borderSir Creek regionpak attackpakistanchinaindia vs pakistanturkey
Share
Tweet
SendShare
Previous Post

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Next Post

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

Related News

குஜராத்தில் கோலாகலமாக நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா; 9 விருதுகளை வென்ற தமிழ் திரையுலகம்

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் : புதினின் UNITED RUSSIA வெற்றி ரகசியம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் தரிசனம்!

தமிழகத்தில் பாரதிய ஜனதா மஜ்தூர் செல் கிளை தொடக்கம்!

காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம் – மாணவர்களுடன் உணவு சாப்பிட்டு தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies