வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்... தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? - சிறப்பு தொகுப்பு!
Sep 22, 2026, 01:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 22, 2026, 01:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை தேனாம்பேட்டையில் வீட்டை வாடகைக்கு எடுத்து சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக ஜெம் குழுமத் தலைவர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் நடத்தும் விசாரணையில் வெளிவரும் அடுத்தடுத்த தகவல்கள் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளன. தமிழ்நாட்டின் எப்ஸ்டீனாக விமர்சிக்கப்படும் வீரமணி சிக்கியது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்,

2025 அக்டோபர் 6 ஆம் தேதி… அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் ஆய்வாளரை சந்தித்து பென் டிரைவ் ஒன்றை வழங்கி இது குறித்து விசாரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். பென் டிரைவில் வயதான நபர் ஒருவர் 13வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அதனைக் கண்ட காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பிரபல தொழிலதிபரும் ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி தான் என்பது தெரியவந்தது.

காவல்துறையினர் அவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது, வீடியோவில் இருக்கும் நபர் தான் இல்லை எனவும், அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறவில்லை என வீரமணி மறுத்துள்ளார். மேலும் வீடியோ காட்சியில் உள்ள சிறுமியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதாலும், பதிவான வீடியோ 2019ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பதாலும் இந்த வழக்கை விசாரித்துச் செல்ல முகாந்திரம் இல்லை எனக்கூறி அவ்வழக்கை கைவிடுவதாக கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறை தனது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

வழக்கின் விசாரணையை முடித்து வைத்த காவல்துறையின் அறிக்கையை ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், விசாரணையை தீவிரப்படுத்தி நான்கு வாரங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்பின்னர் விசாரணையை விரிவுபடுத்திய காவல்துறை குறிப்பிட்ட வீடியோ காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி அதில் இருந்தது வீரமணி தான் என்பதை மீண்டு உறுதிபடுத்தியது.

அதன் தொடர்ச்சியாக வீரமணியை கைது செய்த காவல்துறையினர், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வீரமணி மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏழை, எளிய குடும்பங்கள் மற்றும் பட்டியலினப் பிரிவைச் சார்ந்த குழந்தைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் கல்வி பயில அறக்கட்டளை ஒன்றை வீரமணி தொடங்கியுள்ளார். அது பின்னாளில் ஆதரவற்றோர் ஆசிரமங்களாகவும் உருவெடுத்தது. அந்த ஆசிரமத்தில் ஆதரவற்ற மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பலர் சேர்ந்துள்ளனர்.

அங்கு சேர்வோர்களில் அழகான சிறுமிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான பணம், செல்போன் உள்ளிட்ட இதர வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

பின்னர் அச்சிறுமிகளுக்கு தேவையான கல்லூரிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வீரமணி செய்து கொடுப்பார் எனவும், அவருடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய வேலைகளை செய்ய தனது நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றும் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்மன் ஆகியோரையும் அவர் நியமனம் செய்துள்ளார்.

தேனாம்பேட்டையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கு குறிப்பிட்ட சிறுமிகளை அழைத்து வந்து வீரமணி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீரமணி மட்டுமல்லாது, அவரது நண்பர்களான பல்வேறு பண முதலைகளும் இந்த வீட்டிற்கு வந்து சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்திருப்பதும் உறுதியாகியுள்ளது.

தேனாம்பேட்டை வீட்டை நிர்வகித்து வந்த சாந்தி மற்றும் மகேந்திர சிம்மனிடம் காவல்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவர்களின் இல்லங்களில் சோதனை நடத்தி பல்வேறு சிறுமிகள் மற்றும் பெண்களின் புகைப்படங்களை கைப்பற்றியதோடு சில வீடியோக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இதற்கிடையில் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியையும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். தற்போது 21 வயதாகும் அப்பெண்ணின் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது குறிப்பிட்ட வீடியோவில் இருப்பது தான் தான் என்றும், தம்முடன் இருப்பவர் வீரமணி தான் என்பதையும் அப்பெண் உறுதிசெய்துள்ளார்.

மேலும் பல பெண்கள் வீரமணியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை விரிவுபடுத்திய நிலையில் தற்போதுவரை 9 பெண்கள் வீரமணியால் பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். அதில் தற்போது 50 வயது ஆகும் பெண் ஒருவரும் அடங்கியிருப்பது காவல்துறையினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1989ம் ஆண்டு தனக்கு 13 வயது இருந்த போது வீரமணியால் பாலியல் ரீதியிலான பாதிப்பை சந்தித்ததாகவும் அவர் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

இதற்கிடையே 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பாக வீரமணிக்கும் சாந்திக்கும் இடையே நடைபெற்ற வாட்ஸ் அப் உரையாடலையும் கைப்பற்றிய காவல்துறையினர் தங்களது விசாரணையை மேலும் விரிவுபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உரிய ஆதாரங்கள் இருந்தும் வீரமணியை கைது செய்ய போலீசார் தவறியது ஏன் என்ற விமர்சனம் பரவலாக எழுந்துள்ளது.

எனவே, அப்போது இவ்வழக்கை விசாரணை செய்த அதிகாரிகள், வீடியோவில் இருந்த சிறுமியை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தாமதம், வழக்கின் விசாரணையை முடித்துவைக்க நடந்த முயற்சி வீரமணியை தப்பிக்க வைக்க முயன்றவர்கள் யார் யார் ? என பல்வேறு கோணங்களிலும் விசாரணை விரிவடையத் தொடங்கியிருக்கிறது.

வீரமணியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் யார் ? வீரமணியுடன் இணைந்து சிறுமிகளை சீரழித்தவர்கள் யார் யார் ?

வீரமணியால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் ? என்ற கேள்விகளுக்கான பதில்களை காவல்துறை தேடத்தொடங்கியுள்ளது. வீரமணி தொடர்புடைய வழக்கில் முதலமைச்சரே நேரடியாக தலையிட்டு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதால் மேலும் பல பண முதலைகள் இவ்வழக்கில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: veeramaniGem GroupGem Group veeramaniVeeramani sexually assault caseChennaiPOCSO Act.Teynampet
Share
Tweet
SendShare
Previous Post

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

Related News

ஈரானிய விமான நிறுவனங்களுக்கு சேவை அளிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பொருளாதார தடை – அமெரிக்கா எச்சரிக்கை!

கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை பாதிப்பு!

நடப்பு ஆண்டில் சீனாவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 % அதிகரிப்பு!

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வீட்டை வாடகைக்கு எடுத்த சிறுமிகளை சீரழித்த கொடூரம்… தமிழகத்தின் எப்ஸ்டீன் வீரமணிக்கு உதவிய போலீஸ் அதிகாரிகள் யார்? – சிறப்பு தொகுப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies