தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா - சிறப்பு தொகுப்பு!
Nov 6, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 6, 2026, 08:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான நகரங்கள் தங்களுக்கே உரிய இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஆற்காட்டின் அடையாளமாக திகழும் மக்கன் பேடாவின் தயாரிப்பு பணிகளும் தீவிரமெடுக்க தொடங்கியுள்ளன. அது குறித்து பார்க்கலாம், இந்த செய்தி தொகுப்பில்….

வரலாற்று சிறப்புமிக்க ஆற்காடு நகரத்திற்குச் சென்றால், நெய்யின் மணமும், நாவூற செய்யும் தித்திப்பும்மிக்க இனிப்பு வகை ஒன்று நம்மை சுண்டி இழுக்கும். அதுதான், 333 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட ஆற்காடு ஸ்பெஷல் மக்கன் பேடா!…

தீபாவளி பண்டிகை களைகட்டத் தொடங்கியுள்ள இந்த வேளையில், ஆற்காட்டின் அடையாளமான இந்த இனிப்பு பண்டத்தின் தயாரிப்பும் விற்பனையும் வழக்கத்தை விட பல மடங்கு விறுவிறுப்படைந்துள்ளது.

டெல்லி கேட் போன்ற வரலாற்றுச் சின்னங்களுக்குப் பெயர் பெற்ற ஆற்காட்டில், 333 ஆண்டுகளுக்கு முன்பு நவாப்புகளின் ஆட்சிக்காலத்தில் மன்னருக்கு வழக்கமான இனிப்புகள் சலிப்பை ஏற்படுத்தியதால், புதிய சுவையில் ஒரு இனிப்பைச் செய்ய சமையல் கலைஞர்களுக்கு உத்தரவிடப்பட்டது. கோவா, மைதா, நெய் ஆகியவற்றைக் கொண்டு சமையல் கலைஞர்கள் உருவாக்கிய அந்தப் புதிய இனிப்பு, மன்னரின் மனதை கொள்ளைகொண்டது.

அந்த இனிப்பின்தான், மக்கன் பேடா. அன்றைய அரண்மனை சமையல் கலைஞர்களின் வழிவந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக அதே மாறாத செய்முறையோடு இன்றளவும் அந்த பண்டத்தை தயாரித்து வருகின்றனர்.

மக்கன் பேடா எப்படி செய்யப்படுகிறது என்று சொன்னலே போதும். பலருக்கு நாவில் எச்சில் ஊறத் தொடங்கி விடும்.

மக்கன் பேடா சுவையின் உண்மையான ரகசியமே அதன் உள்ளே வைக்கப்படும் பூரணத்தில்தான் இருக்கிறது. குங்குமப்பூ, தேனில் ஊறவைத்த அத்திப்பழம், பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட், சாரப்பருப்பு, பேரீச்சம்பழம், வெள்ளரி விதை, தர்பூசணி விதை, ஏலக்காய், உலர் திராட்சை, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி என 15 வகையான சத்துமிக்க உலர்பழங்கள் மற்றும் பருப்புகளைக் கொண்டு இந்த சிறப்பு உள்ளீட்டு கலவை தயார் செய்யப்படுகிறது.

கோவா, மைதா, பசு நெய் சேர்த்து பிசைந்த மாவுக்குள் இந்த உலர்பழக் கலவையை பூரணமாக வைத்து உருண்டையாக்கி, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கின்றனர். பின்னர் பிரத்யேக மசாலா, ஏலக்காய் பொடி மற்றும் பசு நெய் மணக்கும் சர்க்கரைப் பாகில் சுமார் இரண்டு நாட்கள் வரை ஊறவைத்து பக்குவமாக விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை என்பதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், இவ்வளவு ஏன் வெளிநாடுகளில் இருந்தும்கூட ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. இதனால் கடை உரிமையாளர்கள் கூடுதல் தொழிலாளர்களை நியமித்து இரவு பகலாக மக்கன் பேடா தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

எந்தவொரு பண்டிகையாக இருந்தாலும் ஆற்காடு மக்கன் பேடா வாங்குவது தங்களது வழக்கமாக உள்ளதாக, ஏராளமான வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இதனை விரும்பி வாங்கி அனுப்பி வைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பட்டாசுகளும் புத்தாடைகளும் தீபாவளியை சிறப்பித்தாலும், 333 ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்த இனிப்பு, தமிழர்களின் பண்டிகைக் கொண்டாட்டத்தில் நீங்காத இடம் பிடித்து ஆற்காட்டின் பெருமையை உலகுக்கு பறைசாற்றி வருகிறது. மேலும், இந்த தீபாவளியை மேலும் தித்திப்பாக்கவும் காத்திருக்கிறது ஆற்காடு ஸ்பெஷல் மக்கன் பேடா!…

 

Tags: deepavali 2026deepawali 20262026 deepawalideepavali date 2026deepawali deepavali light up 2026Deepavali sweetsMakhan PedaArcot
Share
Tweet
SendShare
Previous Post

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

Related News

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளீர்கள்; பிரதமர் மோடி

இந்தியாவின் உள்நாட்டு ஜி.பி.எஸ் செயற்கைகோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தம் : இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies